Latestமலேசியா

போலி ஆவணங்கள் தொடர்பில் FAM-முக்கும் 7 வீரர்களுக்கும் FIFA அபராதம்

ஜூரிக், (சுவிட்சர்லாந்து), செப்டம்பர்-27,

வெளிநாட்டு வீரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கி, தேசிய அணியில் அவர்களை இடம்பெறச் செய்த விவகாரத்தில், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, மலேசியக் கால்பந்து சங்கமான FAM மீது, அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றில் ஜூன் 10-ஆம் தேதி வியட்நாமுக்கு எதிராக ஆடியபோது, வீரர்களின் தகுதிச்சான்றுகளை FAM போலியாக காட்டியதாக FIFA மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதில் சிக்கியவர்கள்
Gabriel Felipe Arrocha, Facundo Tomás Garcés, Rodrigo Julián Holgado, Imanol Javier Machuca, João Vitor Brandão Figueiredo, Jon Irazábal Iraurgui மற்றும் Hector Alejandro Hevel Serrano ஆவர்.

இதனால், FAM-க்கு 3 லட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்க்(Swiss franc )அதாவது 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதமும், அந்த 7 வீரர்களுக்கு தலா 2 ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்க் அல்லது 10,400 ரிங்கிட் அபராதத்துடன், 12 மாத காலத்திற்கு கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், போலி ஆவண விவகாரத்தில் சமரசப் போக்கு இல்லை என்ற தனது கடுமையான நிலைப்பாட்டை FIFA மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, FIFA-வின் அம்முடிவு குறித்து உடனடி அறிக்கை வெளியிட்ட FAM, தங்களைப் பொருத்தவரை அனைத்து நடைமுறைகளும் முறையாகவே பின்பற்றப்பட்டதாகக் கூறியது.

எனவே, மேல்முறையீடு செய்யவிருப்பதையும் அது உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!