Latestமலேசியா

போலி போலீஸ் அதிகாரியால் ஏமாற்றப்பட்ட மாது; RM30,000 இழந்தார்

சிரம்பான், செப்டம்பர் 3 – கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி, Gemencheh, ஜெம்போலில் (Jempol) போலீஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தொலைபேசி மூலம் மோசடி செய்யும் கும்பலால் மாது ஒருவர் ஏமாற்றப்பட்டார்.

ஒரு நிறுவனத்தின் உதவி மேலாளரான 44 வயதான அவர், இந்த மோசடியில் 30,000 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண் அதிக மோசடி வழக்குகளில் ஈடுபட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, புத்ராஜெயாவிலுள்ள தொடர்பு அமைச்சை சேர்ந்த நோர்ஸ்லான் (Norazlan) என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மோசடிக்காரன் ஒருவன் அந்த மாதுவை முதலில் அழைத்துள்ளான்.

அந்த வழக்கை உறுதிப்படுத்த 999 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு கேட்டுகொண்ட நிலையில், கிளந்தான் காவல்நிலையத்திலிருந்து சார்ஜென்ட் ஐன் (Sarjan Ain) என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண், புக்கிட் அமான் காவல்நிலையத்தில் இது குறித்து சோதனை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, Whatsapp வழியும் ஒரு சீன நபருடன் பணமோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் வழக்கிலும், அந்த நபருக்கு CIMB ATM கார்டை 20,000 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறி அழைப்பு வந்துள்ளது.

இதனிடையே, மீண்டும் அறியப்படாத எண்ணிலிருந்து கிளந்தானின் குற்றப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ASP ஆஸ்மி என்று அறிமுகப்படுத்தி கொண்ட போலி போலீஸ், பாதிக்கப்பட்டவரின் தகவல்களை சோதிக்க BNM எனும் தேசிய வங்கி இணைப்பு என்று ஒன்றை வழங்கியுள்ளான்.

அதன் பின்னர், தனது வங்கி கணக்கில் காணாமல் போன பணத்தைக் கண்டறிந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டத்தை அந்த மாது உணர்ந்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!