Latestமலேசியா

போலி மதுபானங்களைத் தயாரிக்கும் கும்பல் இஸ்கண்டார் புத்ரியில் முறியடிப்பு; 9 வெளிநாட்டவர்கள் கைது

இஸ்கண்டார் புத்ரி, பிப்ரவரி-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில், போலி மதுபானங்களைத் தயாரிக்கும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

9 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு, 300,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போலி மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மியன்மாரைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபர்கள் அனைவரும், பிப்ரவரி 7 முதல் 9 வரை தாமான் இண்டாஸ்ட்ரி ஜெயா மற்றும் தாமான் இண்டாஸ்ட்ரி ஜோகூர் பாரு பெர்டானா ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைதாகினர்.

இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். குமராசன் அதனைத் தெரிவித்தார்.

முதல் சோதனையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் 122 பெட்டிகள் மற்றும் பல்வேறு மதுபான முத்திரைகளைக் கொண்ட 45 பாட்டில்கள், போலி மதுபானங்கள் கொண்ட 9 பீப்பாய்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கும் 9 இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்று ACP குமராசன் கூறினார்.

போலி மதுபானத்தில் என்னென்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இவ்வேளையில், மற்றொரு சம்பவத்தில் நூசா பெஸ்தாரியில் வரி செலுத்தாத சுமார் 80,000 ரிங்கிட் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

26 முதல் 46 வயதிலான 7 உள்ளூர் ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டதாகவும் குமராசன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!