
கோலாலம்பூர், ஜூலை 22 – இன்று காலை நியூ கிளாங் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) மோட்டார் சைக்கிள் மோதியதில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
37 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், போலீஸ் பரிசோதனையிலிருந்து தப்பி செல்லும்போது அதிகாரியை மோதி சென்றான் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாருல்நிசாம் ஜாஃபர் @ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த போலீஸ் அதிகாரியின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதமும் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.