பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 20 – இம்மாதம் செப்டம்பர் 28ஆம் திகதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்களிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் தாமதமாகப் பதிவு செய்ய இயலும்.
இதற்கு உயர்கல்வி அமைச்சு அனுமதியளிப்பதாக, அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
தேர்தலில் வாக்களிக்கும் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 29-ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
வாக்காளர்களாக, மாணவர்கள் தங்கள் கடைமையை நிறைவேற்றுவதை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உயர்கல்வி அமைச்சு, 12 பொது பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தத்தம் பல்கலைக்கழகங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்கள் வாக்களிப்பு குறித்து தெரிவிக்கலாம் என்றார்.