கோலாலம்பூர், அக்டோபர்-10 – சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு காரின் மீது மஞ்சள் சாயம் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது முகநூல் பதிவு வாயிலாக தெரிய வருகிறது.
சாலை சந்திப்பில் நிறுத்தப்பட்ட அக்கார் மற்ற சாலைப் பயனர்களுக்கு இடையூறாக அமைந்தது.
அப்பதிவு குறித்து வலைத்தளவாசிகள் பல்வேறு கருத்துகளை வெள்யிட்டு வருகின்றனர்.
சிறிய காரென்ன பெரிய காரென்ன….
விதிமுறை மீறும் அல்லது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனமோட்டிகள் இதுபோன்ற விளைவுகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
மற்றவர்களுக்கும் இதுவொரு பாடமாக இருக்கட்டும் என அவர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
அப்பதிவுக்கு இதுவரை 1,000-க் கும் மேற்பட்ட likes-களும் 300-கும் மேற்பட்ட கருத்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.