Latestமலேசியா

மஞ்சோங் கல் குவாரியில் பாறை விழுந்து ஊழியர் பலி

மஞ்சோங், நவம்பர்-15 – பேராக், மஞ்சோங்கில் உள்ள கல் குவாரியில் crawler இயந்திரத்தில் மண்ணைத் தோண்டும் போது, பாறை மேலே விழுந்து அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

புதன்கிழமை மாலை தனது நண்பருடன் வேலையில் ஈடுபட்டிருந்த போது, பக்கத்திலிருந்த மேட்டிலிருந்து திடீரென உருண்டு வந்த பாறை மேலே விழுந்ததில், 35 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

இதையடுத்து, விசாரணை முடியும் வரை சம்பவ இடத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்குமாறு, பேராக் மாநில வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை JKKP உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனமும், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய உள்விசாரணை நடத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவல்ல பரிந்துரை அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.

அச்சம்பவத்தில், 1994-ஆம் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டம் மீறப்பட்டது கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பான தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் JKKP கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!