Latestமலேசியா

மடானி அரசாங்கத்தின் 2ஆவது ஆண்டு நிறைவு விழா; கட்டண கழிவின் மூலம் RM9.13 மில்லியன் சம்மன் தொகை வசூல்

கோலாலம்பூர், நவ 25 – கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மலேசிய போலீஸ் படை சம்மன்களுக்காக வழங்கப்பட்ட சிறப்பு கழிவு மூலம் மூன்று நாட்களில் 9.13 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.

புக்கிட் அமான் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி ( Mohd Yusri Hassan Basri ) இத்தகவலை வெளியிட்டார். 103,590 சம்மன்களின் மூலம் அந்த தொகை வசூலிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சம்மன்களுக் தீர்வு காண்பதற்கான இலக்கை நாங்கள் நிர்ணிக்கவில்லை. மாறாக சம்மன்களை பெற்ற 32,500 பேர் கழிவு கட்டண திட்டத்தில் தங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள விரும்பியது குறித்து பெருமைப்படுவதாக முகமட் யுஸ்ரி கூறினார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நிலுவையிலுள்ள சம்மன்களுக்கு தீர்வு காணும் பொதுமக்களின் விழிப்புணர்வையும் ஆன்லைன் மூலம் தீர்வு காணும் போக்கையும் உணர முடிந்தது. வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையிலான மூன்று நாள் காலக்கட்டத்தில் மொத்தம் 103,590 சம்மன்கள் மூலம் 91 லட்சத்து 39,750 ரிங்கிட் திரட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!