
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-23,
பினாங்கு, பூலாவ் தீக்கூசில் 48 வயது பாகிஸ்தானிய ஆடவர் screwdriver-ரால் குத்திக் கொல்லப்பட்டதற்கு, கடையில் மதுபானம் திருடியதே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் இடைக்கால தலைவர் சூப்ரிடெண்டண்ட் Lee Swee Sake அதனைத் தெரிவித்தார்.
நேற்று மாலை அவர் மதுபானம் திருடியதை கடை உரிமையாளர் கவனித்து விட்டு, விசாரித்துக் கொண்டிருக்கும் போது, முக்கியச் சந்தேக நபர் தற்செயலாகக் கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார்.
சம்பந்தமே இல்லாமல் இருவருக்கும் இடையில் புகுந்த அவ்வாடவர், பாகிஸ்தானிய ஆடவரை அடித்திருக்கிறார்.
திடீரென கையில் கிடைத்த srewdriver-ரை கொண்டு அவரின் நெஞ்சில் குத்தினார்.
படுகாயமடைந்த பாகிஸ்தானியரை அவரின் நண்பர் அருகிலுள்ள கிளினிக் கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டது உறுதியானது.
இந்நிலையில் முக்கியச் சந்தேக நபரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளது.
அவருடன் கைதான பெண் உள்ளிட்ட மேலும் நால்வர், மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.