![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/475956214_1189238415894111_131274529404461131_n-780x470.jpg)
கோலாலம்பூர், பிப் 7 – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ( Sultan Ibrahim) சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். பேரரசருடன் அவரது இரு புதல்வர்களான Tunku Abdul Rahman மற்றும் Tunku Abu Bakar ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
இந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள் மற்றும் கூட்டரசு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக இஸ்தானா நெகாரா முகநூலில் பதிவிட்டுள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசர் விரைவில் நலன் பெறுவதற்கும் அவர் தொடர்ந்து நலமாக இருப்பதற்கும் பிரார்த்திக்கும்படி அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது.