Latestமலேசியா

மற்றவரின் ஏ.டி.எம் கார்டில் பொருட்கள் வாங்கிய மூன்று சகோதரிகள் கைது

லஹாட் டத்து, ஆக 5 – மற்றவருக்கு சொந்தமான ATM கார்டை பயன்படுத்தி தனிப்பட்ட தேவைக்கான பொருட்களை வாங்கிய மூன்று சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.

காணாமல்போன ATM Agro Bank கார்டை கண்டெடுத்த அந்த மூன்று பெண்களும் PayWave முறையில் அதனை பயன்படுத்தி  Lahad Datu மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொருட்களை வாங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த பெண்கள் கைது செய்யப்பட்டதாக  Lahad Datu மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Dzulbaharin Ismail தெரிவித்தார்.

காணாமல்போன தனது கார்டை பயன்படுத்தி தனது அனுமதியின்றி பல்வேறு வர்த்தக மையங்களில் பொருட்கள் வாங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து உள்நாட்டைச் சேர்ந்த அந்த மூன்று சகோதரிகளும் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Dzulbaharin கூறினார்.

1997ஆம் ஆண்டின் கணினி குற்றச் செயல் சட்டத்தின் 4ஆவது விதி ( 1) இன் கீழ் விசாரணைக்காக அந்த மூன்று பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!