Latestமலேசியா

மலாக்காவில் சிவப்பு விளக்கை மீறி காருடன் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

மலாக்கா, செப்டம்பர்-23 – மலாக்கா, Jalan Pantai Belimbing One Krubong-கில் சாலை சமிக்ஜை விளக்குப் பகுதியில் சிவப்பு விளக்கை மீறிய மோட்டார் சைக்கிளோட்டி, காரோடு மோதி உயிரிழந்தார்.

நேற்றிரவு 10 மணி வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில் மரணமடைந்தவர் ஒரு தொழிற்சாலை ஊழியரான 20 வயது Muhammad Hairul Nizam Mat Sahat என தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் Yamaha Y15R மோட்டார் சைக்கிள் மற்றும் SUV ரக காரான Subaru Forestor என மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் Chiristopher Patit சொன்னார்.

Tanah Merah-விலிருந்து Taman Krubong-கிற்கு செல்லும் வழியில், பச்சை விளக்கு விழுந்ததும் பயணத்தைத் தொடர்ந்த காரை, சிவப்பு விளக்கை மீறிய மோட்டார் சைக்கிளோட்டி வந்து மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, 35 வயது காரோட்டி காயமின்றி தப்பினார்.

மோட்டார் சைக்கிளோட்டியின் சடலம் சவப்பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!