Latestமலேசியா

மலாக்காவில் மாரடைப்பு ஏற்பட்டு e-hailing ஓட்டுநர் காரிலேயே மரணம்

மலாக்கா, அக்டோபர்-2 – மலாக்கா, பாலாய் பாஞ்சாங், லெபோ அலோர் காஜா – மலாக்கா தெங்கா- ஜாசின் சாலையில் காரில் போய்க் கொண்டிருந்த ஆடவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், கார் தடம்புரண்டு அவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், e-hailing ஓட்டுநரான 49 வயது அஸ்மிரா ஒத்மானுக்கு (Azmira Othman) சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.

அவர் பயணித்த Perodua Alza கார், லோரோங் பாண்டான் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியிலிருந்து மாலிம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சம்பவ இடம் வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, வலப்பக்கமுள்ள சாலைத் தடுப்புக் கல்லில் மோதி நின்றது.

சம்பவ இடத்தில் வானிலை நன்றாக இருந்து, சாலை மேற்பரப்பும் உலர்ந்தே இருந்ததால் கார், விபத்தில் சிக்க வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கூறியது.

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!