பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-23 – மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 22 பூனைகளை, அப்பிராணி மீது பரிவுகொண்ட தன்னார்வலர் குழுவொன்று காப்பாற்றியுள்ளது.
அங்கு அண்மையக் காலமாக சில பூனைகள் நெஞ்சை உலுக்கும் வகையில் மர்மமான முறையில் இறந்துகிடந்ததை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட பூனைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கால்நடை கிளினிக்குகளுக்கு அனுப்பியுள்ளனர்.
@Shopbyhaniz எனும் டிக் டோக்கில் கணக்கில் அவ்விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
அவ்வீடியோவுக்கு இதுவரை சுமார் 900,000 views கிடைத்துள்ளது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் அந்த தன்னார்வ குழுவினர் செயல்களைப் பாராட்டி வருகின்றனர்.
பூனைகள் தொடர்ந்து கொடூரமான முறையில் கொல்லப்படுவதை இதன் மூலம் தடுக்க முடிந்திருப்பது குறித்து பலர் நிம்மதி தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து பூனைகள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளது.
கால்நடை சேவைத் துறையும் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.