
கோலாலம்பூர், நவ 3,
CUMIG எனப்படும் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பட்டதாரிகள் அமைப்பின் ஆண்டு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்திய பட்டதாரிகள் ஒன்றுகூடும் விழாவாகவும் அது அமைந்தது. ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் 1960,1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த இந்திய பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் 10 முன்னாள் பட்டதாரிகள் சிறப்பிக்கப்பட்டனர். கல்வி, பொருளாதாரம், சமூக அடையாளம், கலாசாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருது பெற்ற இளம் பட்டதாரியான டாக்டர் சக்திவேல் லெட்சுமணன் தனது அடுத்த 30 ஆண்டுகளுக்கான கனவுகளை நமது சமூகத்தின் ஒத்துழைப்போடு எப்படி நனவாக்க முடியும் என வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டார்
மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய பட்டாரிகள் அமைப்பின் நிகழ்வு தலைமுறைகளை இணைக்கும் பாலமாகவும் மற்றும்
எதிர்கால தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் உதவித் தலைவர் ஸ்ரீ கணேஸ் ஜனார்தனன் தனது
அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
CUMIG அமைப்பின் அம்பாசிடர் அல்லது நல்லெண்ண தூதரக பணியாற்றிவரும் யுகேஸ்வரி சுப்பையா ( Yugeshwar R . Supayah )
தனது அனுபவங்களை மிகவும் சுவைபட விவரிக்கிறார்.
மலாயா பல்கலைக் கழகத்தின் மற்றொரு மூத்த பட்டதாரிகளில் ஒருவரும் வரலாற்று ஆய்வாளரான வழக்கறிஞர் டத்தோ வி.நடராஜன் இன்னமும் இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூக மேம்பாட்டுக்காக தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதில் என்றும் தயங்கியதில்லை.
இந்திய சமூகத்தின் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் துணையாகவும் ஒத்துழைப்பாகவும் மலாயா பல்கலைக்கழகத்தன் இந்திய பட்டதாரிகள் அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்பதற்கான சிறந்த அடித்தளத்தையும் நம்பிக்கையையும் அதன் ஆண்டு விழா நிருபித்திருக்கிறது.



