
கோலாலம்பூர், ஏப் 17 – அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை உயர்த்தியதை தொடர்ந்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
இந்த நெருக்கடியின் உச்சக்கட்டமாக சீன அதிபர் Xi Jinping மலேசியாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகையை அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் Bill O’Reilly மோசமாக கேலி செய்துள்தோடு சீனப் பொருட்களை வாங்குவதற்கு மலாய்க்காரர்களிடம் பணம் இல்லையென்று கூறியிருக்கிறார்.
சீன அதிபர் Xi Jinping கின் மலேசியா, வியட்னாம் மற்றும் கம்போடியாவிற்கான அதிகாரப்பூர்வ வருகையை கேலி செய்ததோடு இந்த தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீனாவின் தொடர்புகளின் பொருளாதார மதிப்பையும் O ‘Reilly கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த மக்களிடம் பணமே இல்லை. அவர்களால் உங்களுக்கு உதவ முடியாது, அவர்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் உங்கள் பொருட்களை வாங்கப் போவதில்லை என்று அதிபர் XI Jinpingகிற்கு சவால் விடுக்கும் வகையில் O ‘Reilly X கிளிப்பில் பதிவிட்டுள்ளார்.
அனைத்துலக பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்குதலை தவிர்க்கும் முயற்சியாக சீனத் தலைவர் குழப்படைந்துள்ளார் என Fox Newsசின் முன்னாள் தொகுப்பாளருமான O’Reilly கூறினார்.
ஒருவேளை வியட்நாமிய லேபிளின் கீழ் சீனப் பொருட்களை பதுக்கி வைக்க XI அங்கு செல்கிறார். ஆனால் அது எளிதில் அம்பலப்படுத்தப்படும்.
எங்களிடம் பணம் இருக்கிறது, நாங்கள் பொருட்களை வாங்குகிறோம். ஆனால் ‘மலாய்க்காரர்கள்’ உங்கள் பொருட்களை வாங்கப் போவதில்லை, அவர்களிடம் பணம் இல்லை என்று O’ Reilly தெரிவித்திருப்பது ஆசிய நாடுகள் மீதான அவரின் கீழ்த்தரமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது