
தாய்லாந்து, டிசம்பர் 10 – கம்போடியா தாய்லாந்து எல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று மோதல்களின் காரணமாக, கம்போடியா அரசு 514 பள்ளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளதென்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 130,000 மாணவர்களும் 4,650 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
கம்போடியா–தாய்லாந்து எல்லை மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீண்டும் தீவிரமடைந்த நிலையில் இதுவரை சுமார் ஏழு கம்போடிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில், எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த 16,568 குடும்பங்களைச் சார்ந்த மொத்தம் 54,550 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், கம்போடிய அரசு நிலைமையைத் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



