
கோலாலம்பூர், அக் 24 – 1 MDB யில் ஏற்பட்ட தவறுகளுக்கு அனைத்து
மலேசியர்களிடமும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் பகிரங்கமாக
மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தமது கண்காணிப்பிலான 1 MDB நிறுவனத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து அறிந்ததை தொடர்ந்து தாம் அதிகம் காயம் அடைந்திருப்பதாக நஜீப் தெரிவித்தார். நஜீப்பின் இந்த அறிக்கையை அவரது மகன் டத்தோ முகமட் நிஷார் வாசித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் மற்றும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அனைத்து மலேசிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதை தவிர வேறு எதனையும் தாம் கூறமுடியாது . கடந்த 26 மாதம் சிறைத் தண்டனையன்போதும் மற்றும் 1 MDB தொடர்பான குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக நஜீப் கூறினார்.