
நீலாய், பிப்ரவரி-22 – நெகிரி செம்பிலான், நீலாய் 3 கம்பளத் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தீயில் அழிந்தவற்றைத் துப்புரவுப் படுத்தும் பணிகள் இன்று காலைத் தொடங்கின.
தீயில் சரிந்து விழுந்த தகரங்களின் கீழ் இன்னமும் தீக்கதிர்களின் அனல் அடிப்பதால், துப்புரவுப் பணியில் சற்று சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
எனினும் இன்று மாலைக்குள் பணிகள் நிறைவடையும் என அத்துறை எதிர்பார்க்கிறது.
700X500 சதுர அடியிலான பரப்பளவைக் கொண்ட அத்தொழிற்சாலையில் நேற்று காலை 8 மணிக்கு தீ ஏற்பட்டது.
தீ வேகமாகப் பரவியதால் வானில் உயரே எழும்பிய கரும்புகையை நீலாய் வட்டாரத்தில் வெகு தூரத்திலிருந்தும் பார்க்க முடிந்தது.
தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.