Latestமலேசியா

மலேசியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பினாங்கு பத்து உபான் மடானி பொங்கல் விழா

பினாங்கு, ஜனவரி 21 – பினாங்கு, பத்து உபான் சட்டமன்ற தொகுதியில், முதல் முறையாக மடானி பொங்கல் மற்றும் கலாச்சார விழா மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தலைமையில், கடந்த ஜனவரி 19ஆம் திகதி நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும், இசை கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றன.

இதில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த பொங்கல் வைத்தல் போட்டியில் 300 பேர் கலந்து பொங்கலிட்டு சிறப்பித்தனர்.

அதேவேளையில், 20 மாட்டு வண்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அலங்காரத் தோரணையுடன் சாலையில் அணிவகுத்துச் சென்றது விழாவுக்கு மெருகூட்டின.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக, பத்து உபான் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 17 அடி உயர மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட பொங்கல் பானை, மலர் அலங்காரத்துடன் மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

இந்தப் பொங்கல் பானையை உருவாக்க மூன்று நாட்கள் பிடித்ததாகவும், 200 கிலோ மலர்களால் அது அலங்கரிக்கப்பட்டதாகவும் குமரேசன் தெரிவித்தார்.

இவ்விழாவில், பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுசி அப்துல் ரசாக் (Tun Dato’ Seri Utama Ahmad Fuzi bin Abdul Razak), மாநில துணையமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமிட் (Datuk Dr Mohamad Abdul Hamid), கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் உட்பட ஏறக்குறைய 2,000க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!