Latestமலேசியா

மலேசியப் பூப்பந்து சங்கத்தை MACC விசாரிக்கிறதா? முறைகேடு குற்றச்சாட்டு என தகவல்

கோலாலம்பூர், டிசம்பர்-2 – மலேசியப் பூப்பந்து சங்கமான BAM, MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த வார தொடக்கத்தில் MACC அதிகாரிகள் புக்கிட் கியாராவிலுள்ள மலேசியப் பூப்பந்துப் பயிற்சி மையத்திற்குச் சென்றதை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

விசாரணைக்கான உண்மைக் காரணம் குறித்து தெளிவாகத் தெரியாவிட்டாலும், முறைகேடு தொடர்பானதாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

அது குறித்து கருத்துரைக்க கேட்ட போது, BAM அதிகாரி ஒருவ ர் மறுத்து விட்டதாக இணையச் செய்தி ஊடகமான Scoop Malaysia செய்தி வெளியிட்டுள்ளது.

BAM-மின் இடைக்காலத் தலைவர் டத்தோ V. சுப்பிரமணியமும், பொதுச் செயலாளர் டத்தோ கெனி கோவும் (Datuk Kenny Goh) வாக்குமூலம் பெற அழைக்கப்படலாமெனவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!