
கமுண்டிங்- ஆக 19 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 198.1ஆவது கிலோமீட்டரில் ஒரு டன் லோரி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுனர் மரணம் அடைந்தார்.
இன்று விடியற்காலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் ஒரு டன் லோரியை ஓட்டிச் சென்ற 32 வயதுடைய ஆடவர் தனது இருக்கையில் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து இறந்தார்.
முட்டைகளை ஏற்றியிருந்த அவர் ஓட்டிச் சென்ற Isuzu லோரி watermelon பழங்களை ஏற்றிச் சென்ற நிசான் UD லோரியின் பின்புறம் மோதியது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற Kamunting தீயணைப்பு மற்றும் மீட்புப்படை உறுப்பினர்கள் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி லோரியின் முன்புற பகுதியை வெட்டி அதன் ஓட்டுநரின் உடலை வெளியே எடுத்தனர்.
எனினும் சம்பவம் நிகழ்ந் இடத்திலேயே அவர் இறந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.