
புத்ராஜெயா, நவம்பர்-6
கல்வி அமைச்சு, 2027 முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
“மனிதனும் சுற்றுச்சூழலும்: ஒருங்கிணைந்தக் கல்வி” எனப்படும் அப்புதிய பாடம், அறிவியல், சுகாதார கல்வி, கலை மற்றும் இசை ஆகியவற்றுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த பாடம், அறிவியல், சுகாதாரம், கலை, இசை, TVET எனப்படும் தொழில்நுட்ப கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, எழுத்துத் திறன், கணிதத் திறன் மற்றும் பண்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடம், இரு ஆசிரியர்கள் இணைந்து கற்பித்தல், திட்டமிடல் மற்றும் மதிப்பீடு செய்யும் co-teaching முறையில் நடத்தப்படும்.
இது தனிப்பயன் கற்றல், சிறந்த வகுப்பறை நிர்வாகம், மற்றும் பல்துறை கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.



