கராச்சி, டிசம்பர்-13, 700 கிலோ கிராம் எடையிலான methamphetamine போதைப்பொருளை மலேசியாவுக்குக் கடத்தும் முயற்சியை, பாகிஸ்தானிய அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
கராச்சியில் உள்ள துறைமுகத்தில் மலேசியாவுக்குப் புறப்பட தயாராக இருந்த கப்பல் கொள்கலனில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்திய போது, அப்பொருள் சிக்கியது.
கால்சியம் கார்போனேட்டுடன் (Calcium Carbonate) கலக்கப்பட்டு 28 பைகளில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கராச்சியைத் தளமாகக் கொண்ட தனியார் நிறுவனமொன்று கோலாலம்பூருக்கான அந்த கொள்கலனை முன்பதிவுச் செய்துள்ளது.
சம்பவ இடத்தில் உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தானிய நாளிதழான Dawn செய்தி வெளியிட்டுள்ளது.