மலேசியாவுக்கு A3 மதிப்பீட்டை நிலைநிறுத்திய Moody’s Rating நிறுவனம்; பிரதமர் பெருமிதம்
புத்ராஜெயா, ஜனவரி-25, அமெரிக்காவின் கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் ரேட்டிங்ஸ் (Moody’s Rating) மலேசியாவின் கடன் தர மதிப்பீட்டை A3 எனும் நிலையான (stable) அந்தஸ்தில் நிலைநிறுத்தியுள்ளது.
இது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இது, நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழலிலும், மலேசியப் பொருளாதார உருமாற்றத் திட்டங்களைத் தொடரும் மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
பொருளாதாரத்தில் புதுமைகளை ஏற்படுத்தி, வட்டார வளர்ச்சியை உந்தச் செய்து, அதன் அனுகூலங்கள் நாட்டு மக்கள் அனுபவிப்பதை அரசாங்கம் தொடர்ந்துஉறுதிச் செய்யுமென்றார் அவர்.
Moody’s Rating வெளியிட்ட அறிக்கையில், வரும் ஈராண்டுகளில் மலேசியா அபரிமித வளர்ச்சிக் காணுமென கணிக்கப்பட்டுள்ளது.
நிலைத்தன்மை மிக்க விலை, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பு, வலுவான மூலதனச் சந்தை ஆகியவற்றால் உந்தப்பட்டு, மலேசியப் பொருளாதாரம் வலுவுடன் இருப்பதாகவும் Moody’s பாராட்டியது.
Moody’s போன்ற முன்னணி நிறுவனங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு அளிக்கும் மதிப்பீடு தான் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படுகிறது.
எந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன், அந்நாட்டுக்கு மேற்கண்ட நிறுவனங்கள் அளி்த்துள்ள gred தரத்தை கவனித்து ஆய்வு செய்தப் பிறகே, முதலீடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.