Latestமலேசியா

ம.இகா முன்னாள் பொதுச் செயலாளர் தான் ஸ்ரீ ஜி.வடிவேலு காலமானார்

கோலாலம்பூர், அக்டோபர்-19 – ம.இ.கா முன்னாள் பொதுச் செயலாளர் தான் ஸ்ரீ ஜி.வடிவேலு முதுமைக் காரணமாக காலமானார்.

கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் (UMMC) இன்று காலை 11.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.

நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் தான் ஸ்ரீ வடிவேலு ஆவார்.

1992 முதல் 1995 வரை அவர் அம்முக்கியப் பொறுப்பு வகித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகு, ம.இ.காவின் Tafe கல்லூரியின் தலைமை செயலதிகாரியாகவும், மாஜூ மேம்பாட்டுக் கல்வி கழகத்தின் அறங்காவலராகவும் சேவையாற்றி வந்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு கோலாலம்பூர், லோரோங் செப்பூத்தே, ஜாலான் புக்கிட் டேசா 3, எண் 12-ல் உள்ள அவரது வீட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

அவரின் நல்லுடல் பின்னர் DBKL மின்சுடலையில் தகனம் செய்யப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!