
பத்து பஹாட், மார்ச்-16 – நேற்று காலை ஜோகூர் யொங் பெங் அருகே, PLUS நெடுஞ்சாலையின் 128.3-ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்தில், இளம் கணவன் மனைவி மரணமடைந்தனர்.
இருவரும் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு சாலைத் தடுப்பை மோதி, பின்னால் வந்த SUV வாகனத்தால் மோதப்பட்டது.
அதில், தலையில் படுகாயமடைந்த அத்தம்பதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
மரணமடைந்தவர்கள் கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவைச் சேர்ந்த 24 வயது Mohd Shahrul Nizam Mohd Ali மற்றும் அவரின் 23 வயது மனைவி Nursuhada Kartika Razak என அடையாளம் கூறப்பட்டது.
SUV வாகனத்தில் வந்த 50 வயது ஆடவர் காயங்களுடன் மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.