கோலாலம்பூர், நவம்பர்-6 – மலேசிய இளையோர் மத்தியில் மனநல ஆரோக்கியம் மிதமான அளவிலேயே இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
MyMHI’23 எனப்படும் 2023-ஆம் ஆண்டுக்கான இளையோர் மனநலக் குறியீட்டில் 71.91 விழுக்காடாகவே அந்நிலை பதிவாகியுள்ளது.
இளையோரிடையே மன அழுத்தம் அதிகரித்து வருவதை இது காட்டுவதாக அஹ்மாட் சாஹிட் சொன்னார்.
அப்பிரச்னை ஆரம்பத்திலேயே களையப்படவில்லை என்றால் பின்னாளில் மோசமான விளைவுகளைக் கொண்டு வந்து விடும்.
எனவே, அந்தக் குறியீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டு, இப்போதே இளையோர் மத்தியில் மனநலப் பிரச்னையைக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றார் அவர்.
ஐநாவின் குழந்தைகள் நிதியமான UNICEF ஒத்துழைப்புடன், இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சு உருவாக்கியுள்ள இந்த MyMHI’23 குறியீடு, நாட்டில் 15 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களின் மனநல ஆரோக்கியத்தை மதிப்பிடும் முக்கிய அளவுகோலாகும்.