
புத்ரா ஜெயா, ஜூலை 14 – மே 2025 இல் மின்னணு பணத்தை (e- wallet) பயன்படுத்தும் பரிவர்த்தனைகளின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 70.2 சதவீதம் அதிகரித்து, RM21.5 பில்லியனை எட்டியதால், மலேசியர்கள் டிஜிட்டல் வாழ்க்கை முறையை நோக்கி கடுமையான மாற்றத்தைக் காட்டுகிறார்கள். இந்த வளர்ச்சி, நாடு முழுவதும் பயனீட்டாளர் மத்தியில் பணமில்லா கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதை என மலேசிய புள்ளிவிவரத் துறை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இந்த எழுச்சி பரவலான டிஜிட்டல் கட்டணப் போக்கின் ஒரு பகுதியாகும். ரொக்கமற்ற
மின்- wallet டுகளுக்கு கூடுதலாக, ஆன்லைன் வங்கி வழியாக பரிவர்த்தனைகளும் 21.1 சதவீதம் வேகமாக வளர்ந்து 39.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது அதிகரித்த ஆன்லைன் வங்கி நடவடிக்கைகளை பரவலாக்கியுள்ளது.
அதே நேரத்தில், பணம் செலுத்துவதற்கு Debit கார்டுகளின் பயன்பாடு 8.0 விழுக்காடு அதிகரித்து 14.1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் ( Mohamad Uzir Mahidin) தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி, மாறிவரும் பயனிட்டாளர் செலவு முறைகள் மற்றும் மலேசியாவில் கட்டண உள்கட்டமைப்பில் டிஜிட்டல் மயமாக்கலின் முன்னேற்றத்திற்கு ஏற்ப ரொக்கமில்லா கட்டண வழிகளின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது
அவர் கூறினார்.