
ஷா அலாம், மார்ச் 24 – கமுனிங் – ஷா அலாம் (Kemuning-Shah Alam) நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றபோது நிகழ்ந்த விபத்தில் ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் காயம் அடைந்தான்.
ஷா அலாம் செக்சன் 14 இல் Persiaran Sultan சாலையில் போலீஸ் சோதனையை மேற்கொண்டபோது மோடனாஸ் கிறிஸ் (Modenas Kriss ) மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற அந்த மாணவன் திடீரென வந்த வழியிலேயேதிரும்பிச் செல்ல முயன்றபோது விபத்திற்குள்ளானதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறியதால் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவின் போலீஸ்காரர் அந்த மாணவரை தடுக்க முயன்றபோது நான்கு சக்கர வாகனம் மோதி அந்த மாணவன் கீழே விழுந்தான்.
இடது தொடை மற்றும் தோள் பட்டையில் காயம் அடைந்த அந்த இளைஞன் சிகிச்சைக்காக ஷா அலாம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான்.
போலீஸ் மேற்கொண்ட சோதனையின்போது அந்த 17 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளோட்டும் உரிமத்தை கொண்டிருக்கவில்லை என்பதோடு அந்த மோட்டார் சைக்கிளின் சாலை வரியும் காலாவதியாகியிருந்தது தெரியவந்தது.
வாகனத்தின் Dashcam மின் காணொளியில் பதிவான இந்த சம்பவம் தொடர்பான 19 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக தலைத்தளத்தில் வைரலானதாக முகமட் இக்பால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.