ஸ்ரீ கெம்பாங்கான், நவம்பர்-17 – பயணியை எடுக்கச் செல்லும் வழியில் செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், The Mines பேரங்காடி ஏரிக்குள் e-hailing ஓட்டுநர் காரோடு விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 3.30 வாக்கில் கடும் மழையின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
49 வயது அம்மாது, Aestetica Residence குடியிருப்பில் பயணியை எடுக்கச் சென்ற வழியில், அவரின் Toyota Vios கார் சாலையில் தேங்கியிருந்த நீரில் சிக்கி தடம்புரண்டு Mines ஏரிக்குள் விழுந்தது.
எனினும் காரின் முன்பக்க கதவைத் திறந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்ட அம்மாதுவை, ஏரியிலிருந்த படகொன்று பாதுகாப்பாக மீட்டது.
அவருக்குக் காயமேதும் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக, செர்டாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் A.A.அன்பழகன் தெரிவித்தார்.
Mines ஏரிக்குள் கார் விழுந்த வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.