அமெரிக்காவின் தென் பகுதியை அரிய புயல் தாக்கியது நால்வர் மரணம்

வாஷிங்டன் , ஜன 22 -அமெரிக்காவின் தென் பகுதியை அரிய
பனிப்புயல் தாக்கியதில் நால்வர் மரணம் அடைந்தனர். இந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் ஆழமான தெற்கின் சில பகுதிகளில் பனி மற்றும் உறைபனி மழையைக் கொண்டு வந்தது. டெக்சாஸில் நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்ட சூழ்நிலையை உருவாக்கியதோடு தென்மேற்கு லூசியானாவில் முதல் பனிப்புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் , குளிர் தொடர்பான இரண்டு சம்பவங்களை Austin அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜார்ஜியா மற்றும் மில்வாக்கியில் ( Milwaukee) யில் தாழ்வெப்பநிலையால் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் வடக்கில் , நியூயார்க் மாநிலத்தின் சில பகுதிகள் மற்றொரு புயலால் தாக்கப்பட்டு வருகின்றன. 18 அங்குலம்கள்வரை பனியால் மூடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்குள் 2,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, மேலும் 3,000 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதாக ஒன்லைன் டிராக்கர் ஃப்ளைட் அவேர் ( online tracker flight Aware ) தெரிவித்துள்ளது.