
கோலாலம்பூர், மார்ச் 12 – இந்துக்களால் இன்று அனுசரிக்கப்படும் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, போலிசார் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சில முக்கிய சாலைகளை கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றை படிப்படியாக மூடவும் திறக்கவும் உள்ளனர்.
மாசி மக திருவிழாவை முன்னிட்டு. மாலை 5 மணிக்கு பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திலிருந்தும், ஜாலான் துன் H.S. லீயில் (Jalan Tun H.S. Lee) உள்ள கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கு தேர் ஊர்வலம் நடைப்பெறவுள்ளதால் சாலைகள் மூடப்படுவதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், ACP Mohd Zamsuri Isa தெரிவித்தார்.
Lebuhraya Lingkaran Tengah 2 (MRR2), Jalan Sentul, Jalan Sultan Azlan Shah (Jalan Ipoh), Jalan Tuanku Abdul Rahman, Jalan Ampang, Jalan Tun Perak, Jalan Pudu, மற்றும் Jalan Sultan ஆகியவை மூடப்படும் அந்த சாலைகளாகும்.
இந்த தேர் ஊத்வலம் சிறப்பாக நடைபெறுவதோடு, அனைவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்திற்கான திட்டங்களை போடுவதோடு போலீசாரின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.