பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 4 – பினாங்கு டி.ஏ.பி தலைவர் செள கோன் இயோவ் (Chow Kon Yeow), செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெறும் மாநிலக் கட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
எனினும், பதவிக் காலம் முடியும் வரை அவர், பினாங்கு மாநில முதலமைச்சராகப் பணியாற்றுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் (Anthony Loke Siew Fook) கூறினார்.
இந்த முடிவால், மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை அது பாதிக்காது என்றும் தெளிவுப்படுத்தினார்.
25 ஆண்டுகளாக அவர் செயல்படுத்தி வந்த, பினாங்கு டி.ஏ.பியில், தற்போது தலைமைத்துவத்தை புதுப்பிப்பதற்கான உணர்வில் எடுக்கப்பட்ட செளவின் முடிவை மதிப்பதாகவும் அவர் கூறினார்.