
லண்டன், ஜூலை 22 – பிரபல காற்பந்து வீரர் கேமரூனிய விங்கர் பிரையன் எம்பியூமோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்து 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
25 வயதான எம்பியூமோ, கடந்த சீசனில் பீஸ் அணிக்காக 38 லீக் ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து, முன்னிலைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைவது என்பது தனது சிறு வயது கனவு என்றும் அதனால் MU வழங்கிய இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இது ஒரு பெரிய கிளப் என்றும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளதென்றும் கூறிய அவர் மான்செஸ்டர் அணிக்காக சிறந்த பரிசுக்கு சவால் விடுவதில் தமது அணியினர் உறுதியாக இருக்கின்றோம் என்று பதிலுரைத்துள்ளார்.