
முக்கா , செப் 4 – Kaul Mukaவில் உள்ள கால்வாயில் மூன்று அடி நீளம் கொண்ட முதலைக் குட்டி ஒன்று பிடிபட்டது.
இன்று காலை மணி 7.06 அளவில் அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த Sarawak தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கயிற்றை பயன்படுத்தி அந்த முதலைக் குட்டியை பிடித்தனர்.
பின்னர் வனத்துறை கழகத்திடம் மேல் நடவடிக்கைக்காக அந்த முதலைக் குட்டி ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரி ஸ்டீபன் பிளன் (Stephen Plan ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.