இதோ மீண்டும் 13வது ஆண்டாக மலர்ந்துவிட்டது வணக்கம் மலேசியா ஏற்பாட்டிலான மாணவர் முழக்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 2025.
ஆர்வமுள்ள மாணவர்கள், பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றி உங்களின் காணொளியை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு கூகள் லின்க் வழி அனுப்பி வைக்கவும்.
மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஏதேனும் ஒரு தலைப்பில் உங்கள் உரையினை பதிவு செய்து அனுப்பி வைக்கலாம். இதனுடன் போட்டி விதிமுறையும் பதிவு பாரத்தின் இணைப்பும் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேல் விவரங்களுக்கு, 03-2284 3000 என்ற எண்ணுடன் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.
போட்டி விதிமுறைகள்
- இப்பேச்சுப் போட்டியில் தமிழ்ப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
- மாணவர்கள் 10 – 12 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- மாணவர்களின் பதிவு பாரம் & காணொளியை எங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான இறுதி நாள் : 15 ஆகஸ்ட் 2025
- இவ்வாண்டு போட்டி, மொத்தம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- அடிப்படைத் தேர்வுச் சுற்று
- காலிறுதிச் சுற்று
- அரையிறுதிச் சுற்று போட்டியாளர்களுக்கான விளக்கப் பட்டறை
- அரையிறுதிச் சுற்று
- இறுதிச் சுற்று
5. முதல் பிரிவு : அடிப்படைத் தேர்வுச் சுற்று
- இந்தப் பிரிவானது மிகவும் எளிது.
- மொத்தம் 6 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- அந்த 6 தலைப்புகளில் ஏதேனும் 1 தலைப்பை உங்கள் ஒவ்வொரு
மாணவர்கள் தேர்ந்தெடுத்து உரையை படைக்க வேண்டும். - தேர்ந்தெடுத்த தலைப்பில் மாணவர்கள் 1 1/2 நிமிடம் பேச வேண்டும். மாணவர்கள் பேசும் உரையினை வீடியோ பதிவு செய்து, ஒரு google link-கை நீங்களை உருவாக்கி அந்த இணைப்பை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் நாங்கள் கொடுக்கும் பதிவு பாரத்தையும் ஒவ்வொரு மாண்வருக்கென பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
- அப்படி எங்களுக்கு வருகின்ற மொத்த வீடியோக்களில் சிறந்த பேச்சுத் திறன் கொண்ட 20 மாணவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் தேர்வு செய்ய்யப்படுவார்கள்
- தேர்வு பெற்ற அந்த 20 மாணவர்களும் (ஒவ்வொரு மண்டலத்திற்கும் 20 மாணவர்கள்) காலிறுதிச் சுற்றுக்குச் சுற்றுக்குத் தகுதிப் பெறுவார்கள்.
- மாணவர்களின் வீடியோக்கள் கீழ்காணும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்:
- உச்சரிப்பு
- எழுத்துப் படிவம்
- குரல் வளம்
- படைப்பு / பேச்சு ஆளுமை
- மொழி நடை
- கருத்து
- வீடியோவை எங்களுக்கு அனுப்பி வைக்கும் முறை :
~ மாணவரின் முழு பெயர், பள்ளியின் பெயர் மற்றும் வயது ஆகிய
அறிமுகத்தோடு மாணவர்கள் பேச்சினைத் தொடங்க வேண்டும்
~ வீடியோ அமைதியான சூழலில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
(சுற்றுப்புறச் சூழல் சத்தம் இல்லாமல் இருத்தல் அவசியம்)
~ வீடியோ “MIDDLE SHOT& LANDSCAPE MODE” இல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
~ மாதிரிப் படம்
Middle shot / Landscape mode
~வீடியோவை G00GLE DRIVE மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
~ வீடியோ எங்களுக்கு கிடைக்கப்பெற்றுவிட்டதா என்பதை தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் மாணவர் முழக்கம் முகநூலில் தெரிவிக்கப்படும். அதன் பிறகு மாணவர்களை ஏற்பாட்டாளர்கள் தொடர்புக் கொள்வார்கள்
- நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது, தீர்க்கமானது
6. இரண்டாம் பிரிவு : காலிறுதிச் சுற்று
- ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் அடிப்படைத் தேர்வுச் சுற்றில் தேர்வாகும் 20 மாணவர்கள் பின்னொரு நாளில் நடைபெறும் காலிறுதிச் சுற்றில் பங்கெடுப்பார்கள்.
- காலிறுதிச் சுற்றுத் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.
- போட்டி நடைபெறும் திகதி மற்றும் நேரம் பிறகு அறிவிக்கப்படும்.
- இரண்டாம் கட்ட தேர்வுச் சுற்றின் முடிவில், ஒவ்வொரு மண்டலத்தையும் பிரதிநிதித்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கும் பின்னர் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறுவார்கள்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது, தீர்க்கமானது.
7. மூன்றாம் பிரிவு : அரையிறுதிச் சுற்றுப் போட்டியாளர்களுக்கான விளக்கப் பட்டறை
- அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் மாணவர்கள் விளக்கப் பட்டறையில் பங்கேற்க வேண்டும்.
- விளக்கப் பட்டறையில் பங்கேற்பது கட்டாயம்.
- பட்டறை நடைபெறும் திகதி மற்றும் நேரம் பிறகு அறிவிக்கப்படும்.
8. நான்காம் & ஐந்தாம் பிரிவு : அரையிறுதிச் சுற்று & இறுதிச் சுற்று
- இந்த பிரிவுகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது, தீர்க்கமானது.
9. போட்டி விதிமுறைகளை/ நேரத்தை / சுற்றுகளை எந்த ஒரு தருணத்திலும் மாற்றம் செய்வதற்கு ஏற்பாட்டுக் குழுவினருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு.
முதல் பிரிவு : அடிப்படைத் தேர்வுச் சுற்றுக்கான 6 தலைப்புகள்:
- ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துகிறது தொழில்நுட்ப வளர்ச்சி
- யூபிஎஸ்ஆர் தேர்வு மீண்டும் வேண்டும்
- வெள்ளை நிறம் அழகு மட்டுமல்ல அர்த்தமும் நிறைந்தது
- இன்றைய மாணவர்கள் அதிபுத்திசாலிகள்
- கூடா நட்பே வன்முறை கலாச்சாரத்தைத் தூண்டுகிறது
- பெற்றோரின் அர்ப்பணிப்பைப் பல பிள்ளைகள் அறிந்திருக்கவில்லை
விண்ணப்ப பாரத்தின் இணைப்பு : https://forms.gle/LBPjSxV5X3P9edww9