
மீரி, பிப்ரவரி-16 – MyCorps எனப்படும் அனைத்துலக இளையோர் தன்னார்வலர் திட்டத்தின் கீழ் சரவாக் மீரியில் Misi Borneo முன்னெடுப்பு தொடங்கியுள்ளது.
அங்கு வசதி குறைந்த குறிப்பாக பெனான் பூர்வக்குடியினரின் வாழ்க்கைச் சூழல், முறையான கழிப்பிட வசதி கூட இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை தரத்தில் தங்களால் முடிந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக 20 மாணவர்கள் படிக்கும் வகையில் ஒரு கொள்கலன் (cabin) அமைப்பது, அவர்கள் பயன்படுத்த ஏதுவாக பொது கழிவறை அமைப்பதும் அவற்றில் அடங்கும்.
இத்திட்டத்திற்காக சுமார் 50,000 ரிங்கிட் நிதி தேவைப்படுவதாக தன்னார்வலர்களில் ஒருவரான காசிபன் முனியாண்டி கூறினார்.
உங்களின் ஒவ்வொரு நன்கொடையும் இங்குள்ள சிறார்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதால், நல்லுள்ளங்களின் பங்களிப்பை தன்னார்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
ரொக்கமாகவோ அல்லது மேசை நாற்காலி போன்ற பொருளுதவியாகவோ வழங்க விரும்புவோர் MyCorps அமைப்பைத் தொடர்புக் கொள்ளலாம்.