Latestமலேசியா

முக அங்கியில் புகுந்த குளவி கொட்டி, சுங்கை பட்டாணியில் 61 வயது மாது மரணம்

சுங்கை பட்டாணி, நவம்பர் 4 – நேற்றிரவு சுங்கை பட்டாணி, தாமான் செமராக்கில் 61 வயது மாது, முக அங்கியில் குளவி புகுந்து கொட்டியதால் மரணமடைந்தார்.

வீட்டின் வரவேற்பறையில் மாலை பிரார்த்தனை நேரத்திற்குக் காத்திருக்கும்போது, குளவி ஒன்று மின்விசிறியில் தாக்கப்பட்டு, அவர் அணிந்திருந்த முக அங்கிற்குள் நுழைந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அந்த மாது, குளவியை நசுக்குவதற்கு முன், அது அவரைக் கொட்டியது.

இச்சம்பவத்தை வீடு திரும்பிய பாதிக்கப்பட்டவரின் மகன் உறுதிப்படுத்தியதாக கோலாமுடா மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான வான் அசாருதீன் வான் இஸ்மாயில் (Wan Azharuddin Wan Ismail) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பதற்கு முன் தனது மகனிடம் குளவி கொட்டியதைக் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவர் மரணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!