
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-13,
பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தொழிலாளி கேபிள் மின்கம்பியை வெறுங்கையால் இடம் மாற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அங்குள்ள கட்டுமானத் தளமொன்றில் நேற்று காலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்திற்கு முன்பு, ஒரு லாரி மண் அள்ளும் பணியை மேற்கொண்டிருந்த போது, அதன் வாளி ஒரு மின் கேபிளைத் தொட்டதால் அது துண்டிக்கப்பட்டு வெளியே தெரிந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த வெளிநாட்டுத் தொழிலாளி அப்பகுதியைக் கடந்து செல்லும்போது திடீரென வெறும் கைகளால் கேபிளை நகர்த்த முயன்றார்; இதன் விளைவாக மின்சாரம் தாக்கி அவர் மரணமடைந்ததாக, வேலையிட சுகாதார பாதுகாப்புத் துறையான DOSH தெரிவித்தது.
மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது; மேல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறினர்.