
மெர்சிங், பிப்ரவரி-27 – ஜோகூர், மெர்சிங்கில் உள்ள கடல் அமுலாக்க நிறுவனத்தின் கட்டட சுவரில் ஸ்ப்ரே மூலம் கிறுக்கியக் குற்றத்திற்காக, செக் குடியரசு சுற்றுப் பயணிக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 23-ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததை 33 வயது Brukner Martin மெர்சிங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
முறையீட்டின் போது நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரிய அவ்வாடவர், இனிமேல் அது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார்.
அந்நபர் சுவரைச் சேதப்படுத்தியதில் 2,000 ரிங்கிட் நட்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.