
மெல்பெர்ன், செப் 8- ஆஸ்திரேலியாவிற்கு மல்லிகைப் பூவை எடுத்துச் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு (Navya Nair ) Melbourne அனைத்துலக விமான நிலையத்தில் 1,980 அமெரிக்க டாலர் அதாவது 1 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அவரிடம் 15 சென்டிமீட்டர் மல்லிகைக் சரம் கண்டுபிடிக்கப்பட்டது. Melbourneனில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை நவ்யா நாயர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மலையாளி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள நவ்யா ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
பார்வையாளர்களிடையே உரையாற்றியபோது ஆஸ்திரேலியாவிற்கு மல்லிகைப் பூக்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற விவகாரம் தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
ஆனால் அறியாமை ஒரு தவிர்க்க முடியாத காரணம் என்பதை அவர் என்று ஒப்புக்கொண்டார். ஆஸ்திரேலியாவின் விவசாயம்,மீன்வளம் மற்றும் வனத்துறை விதித்த அபராதத் தொகையை நவ்யா நாயர் செலுத்தினார்.