
நீலாய், ஜூலை 21 – வர்த்தகங்களைத் தொடங்குவதற்கு வசதி வாய்ப்புகள் வழங்கிய போதும், இன்னும் வணிகங்களை ஆரம்பிக்காத வியாபாரிகளின் மைகியோஸ்க் வாய்ப்பு திட்டங்கள் திரும்பப் பெறப்படவுள்ளது.
நுழைவுச் செயல்முறையை முடிக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு மாத காலம் போதுமானது என்று மாநில ஊராட்சித் துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் கூறியுள்ளார்.
அண்மையில் மந்தின் தாமன் பூங்கா ராயாவில் ஒரு மாதத்திற்கு முன்பு சலுகைக் கடிதம் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் வணிகத்தைத் தொடங்காத ஒருவரைத் தவிர மற்ற 9 பேரும் வணிகத்தைத் தொடங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தகுதிவாய்ந்த மற்றும் மைகியோஸ்கில் வணிகம் செய்ய விரும்பும் பல வர்த்தகர்கள் இன்னும் இருப்பதால், வர்த்தகர்கள் வழங்கப்பட்ட ஒப்புதலை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.