
வாஷிங்டன், ஜூலை-2 – தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கை நாடு கடத்துவது குறித்து தாம் பரிசீலிக்கக் கூடுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கோடி காட்டியுள்ளார்.
தனது முதன்மை செலவு மசோதாவை இலோன் மாஸ்க் கடுமையாக விமர்சித்து வருவதை அடுத்து, ட்ரம்பின் இந்த அதிரடி பேச்சு வெளியாகியுள்ளது.
மே மாத இறுதியில் மஸ்க் பதவி விலகுவதற்கு முன்பு வரை அவர் தலைமை தாங்கிய அரசாங்க செயல்திறன் துறை, அடுத்து அந்த டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனரின் அரசாங்க மானியங்கள் மீதும் ‘கை வைக்கலாம் என டிரம்ப் கூறினார்.
சர்ச்சைக்குள்ளான வரி மசோதாவில் EV எனப்படும் மின்சார வாகனங்களை ஆதரிக்கும் கொள்கைகள் விடுப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியிலேயே, மாஸ்க் அதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அவரின் புலம்பலை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக சற்று கேலியான தோரணையில் ட்ரம்ப் சொன்னார்.
ஆனால் இலோன் மாஸ்க் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்; அரசாங்க மானியங்கள் மட்டும் இல்லையென்றால் அவர் கடையை மூடி விட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்ப வேண்டியது தான் என ட்ரம்ப் எச்சரித்தார்.
உலக மகா கோடீஸ்வரரான இலோன் மாஸ்க், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்பின் பிரச்சாரங்களுக்கு கோடிக்கணக்கான டாலர் பணத்தை வாரி இறைத்தவர் ஆவார்.
ஜனவரியில் ட்ரம்ப் அதிபரானதும், அவரின் வலது கரமாக, அதுவும் அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு அவர் வலம் வந்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த உறவு கசந்து, இருவரும் வெளிப்படையாகவே ஒருவரையொருவர் தாக்கிப் பேசும் நிலைக்கு மோசமானது.
சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை ட்ரம்ப் நிர்வாகம் நிறைவேற்றினால், ‘அமெரிக்கா கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என இலோன் மாஸ்க் மிரட்டியுள்ளார்.
உலக மகா கோடீஸ்வரரான இலோன் மாஸ்க், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்பின் பிரச்சாரங்களுக்கு கோடிக்கணக்கான டாலர் பணத்தை வாரி இறைத்தவர் ஆவார்.
ஜனவரியில் ட்ரம்ப் அதிபரானதும், அவரின் வலது கரமாக, அதுவும் அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு அவர் வலம் வந்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே அந்த உறவு கசிந்து, இருவரும் வெளிப்படையாகவே ஒருவரையொருவர் தாக்கிப் பேசும் நிலைக்கு மோசமானது.
சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை ட்ரம்ப் நிர்வாகம் நிறைவேற்றினால், ‘அமெரிக்கா கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என இலோன் மாஸ்க் மிரட்டியுள்ளார்