
கோலாலம்பூர்,அக்டோபர்-17
ம.இ.கா யாரோடும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கணக்கில் கொண்டு கூட்டணி விவகாரத்தில் முடிவெடுக்காது. மாறாக கட்சி மற்றும் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும் என ம.இ.கா தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆகையால் பல்வேறு அரசியல் சூழலையும் மாற்றங்களையும் கவனமாக ஆராய வேண்டியுள்ளதாகவும் பதவியைப் பெற வேண்டும் என்பது தங்களின் நோக்கமல்ல என்றும்
நேற்றைய மத்திய செயலவை கூட்டத்திற்கு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ம.இ.காவும் ம.சீ.சாவும் ஏன் இணைந்து அம்னோவை தேசிய முன்னணியில் இருந்து வெளியேற்றக்கூடாது என கேட்கப்பட்டதற்கு தேசிய முன்னணிக்கு தற்போது மக்களின் வாக்கு ஆதரவு இல்லை என்பதோடு அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.