கசான், அக்டோபர்-23 – யுக்ரேய்ன் மண்ணில் அமைதித் திரும்புவதையே இந்தியா விரும்புவதாக, அதன் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவின் கசான் நகருக்குச் சென்றுள்ள மோடி, மாநாட்டுக்கு முதல் நாள் அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்து பேசிய போது அவ்வாறு சொன்னார்.
போர் நிறுத்தத்திற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ய புது டெல்லி தயாராக இருப்பதாகவும், புட்டினிடம் மோடி உத்தரவாதம் அளித்தார்.
ரஷ்யாவுடனான இந்தியாவின் வலுவான பங்காளித்துவம் மகிழ்ச்சி தான் என்றாலும், யுக்ரேய்ன் விஷயத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இது குறித்து புட்டினுடன் மேலும் பேசவிருப்பதாக மோடி சொன்னார்.
2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஆசிய நட்பு நாடுகளும் உலக அரங்கில் ரஷ்யாவைத் தனிமைப் படுத்த முயன்று வருகின்றன.
அதற்கு பதிலடியாக BRICKS உச்ச நிலை மாநாட்டின் மூலம் மேற்கத்திய அல்லாத நாடுகள் தன் பின்னால் அணிவகுத்து நிற்பதாகக் காட்டிக் கொள்ள ரஷ்யா முனைவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா சந்தித்துள்ள மிக மோசமான போராக இந்த ரஷ்ய-யுக்ரேய்ன் மோதல் விளங்குகிறது.