
மாஸ்கோ, ஜூலை 31 – நேற்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கம்சட்கா (Kamchatka) தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.
ரஷ்யாவுடன் ஹவாய், சிலி, கொலம்பியா மற்றும் எக்வடார் உள்ளிட்ட நாடுகளும், தங்கள் கடற்கரைகளைச் சென்றடையும் பெரிய வெள்ள அலைகள் எதுவும் பதிவாகாததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்ததுள்ளன.
இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் எச்சரிக்கை அமைப்பு சீராக செயல்பட்டதாகவும் உள்ளூர் ஊடகம் அறிவித்துள்ளது.
இந்த பெரிய நிலநடுக்கம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பசிபிக் பகுதிகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தகக்கத்து.