Latestமலேசியா

ரெம்பாவ் அருகே PLUS நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து கவிழ்ந்தது

ரெம்பாய், மார்ச்-12 – ஓட்டுநர் உட்பட 40 பேருடன் சென்ற விரைவுப் பேருந்தொன்று ரெம்பாவ் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 245.5-ஆவது கிலோ மீட்டரில் இன்று காலை கவிழ்ந்தது.

அந்த 40 பேரில் 38 பேர் பெண்கள் ஆவர்.

காலை 6 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் 6 பெண் பயணிகள் சிராப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.

அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்விபத்து காரணமாக நெடுஞ்சாலையின் இரு வழிப் பாதைகளிலும் போக்குவரத்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவசரப் பாதையில் smartlane ஏற்பாடு செய்யப்பட்டதாக PLUS நிறுவனம் தனது X தளத்தில் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!