
ரொம்பின், ஆகஸ்ட்-25 – ரொம்பின், Bukit Serok அருகே Jalan Muadzam Shah – Bahau சாலையில் 2 வாகனங்கள் மோதிக் கொண்டதில், 3 வயது குழந்தை உட்பட மூவர் மரணமடைந்தனர்.
ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
நெகிரி செம்பிலான், பஹாவிலிருந்து 4 பெண்கள் மற்றும் 1 குழந்தையை ஏற்றிக் கொண்டு ஆடவர் ஓட்டிச் சென்ற கார் Muadzam Shah செல்லும் வழியில், எதிர் திசையில் வந்த 4 சக்கர வாகனத்துடன் மோதியது விசாரணையில் தெரிய வந்தது.
வாகனத்திற்குள் சிக்குண்டு ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
4 சக்கர வாகனத்தின் ஓட்டுநர் உட்பட மற்ற அறுவரும் சிகிச்சைக்காக Muadzam Shah மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 18 வயது பெண்ணும், 3 வயது பெண் குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமுற்றனர்.
சவப்பரிசோதனைக்காக குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டன.
அவர்களின் அடையாளங்கள் இன்னமும் விசாரணையில் இருப்பதாக ரொம்பின் போலீஸ் கூறியது.