
லங்காவி, மார்ச்-20 – கெடா, லங்காவி, தாசேக் டாயாங் புந்திங் ஏரியில் இந்தியப் பிரஜையான 55 வயது ஆடவர் நேற்று மூழ்கி மாண்டார்.
நண்பகல் 12 மணியளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக, லாங்காவி தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
விவேக் அஷோக் என அடையாளம் கூறப்பட்ட அந்நபரின் உடல், பிற்பகல் 2.30 மணி வாக்கில் மீட்கப்பட்டது.
மேல் நடவடிக்கைக்காக சடலம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக அந்நபர் அங்குச் சென்றிருக்கலாமென நம்பப்படுகிறது.